Friday, 25 September 2015


Current Feed Content மெக்கா ஹஜ் யாத்திரை கூட்ட நெரிசலில்...750 போ பலி! :ஒரே இடத்தில் லட்சம் பேர் திரண்டதால் சோகம்

Posted:24-09-15 23:00 மினா (சவுதி அரேபியா),: மெக்கா அருகே மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 750 பேர் உயிரிழந்தனர்; இறந்தவர்களில், மூன்று பேர் இந்தியர்கள். 800க்கும் அதிகமானோர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் மேற்கே உள்ள வளைகுடா நாடுகளில் ஒன்று, சவுதி அரேபியா. இங்கு உள்ள, முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவுக்கு, ஆண்டுதோறும் ஏராளமான முஸ்லிம்கள், 'ஹஜ்' பயணம் மேற்கொள்கின்றனர். இந்தாண்டும், 20 லட்சம் பேர், இப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர்; இந்தியாவில் இருந்து, 1.30 லட்சம் பேர் சென்றுள்ளனர். கட்டுமான பணி ... கடிதம் எழுதுவதால் பிரச்னை தீர்ந்து விடாது: விஜயகாந்த் Posted:24-09-15 23:46 புதுக்கோட்டை:''காவிரி, முல்லை பெரியாறு பிரச்னையில், மாநில அரசு நாடகமாடுகிறது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.முஸ்லிம் அமைப்புகள் சார்பில், புதுக்கோட்டை அய்யா மண்டபத்தில், நேற்று நடத்தப்பட்ட, 'பக்ரீத்' நிகழ்ச்சியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பிரேமலதா பேசுகையில், ''விஜயகாந்த், மேக்கப் போட்டு, சினிமாவில் நடிக்க தெரிந்தவர். ஆனால், மக்களுக்கு முன் நடிக்க தெரியாதவர்,'' என்றார்.பின், விஜயகாந்த் அளித்த பேட்டி:காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளில், மாநில அரசு நாடகம் ஆடுகிறது. ... சமச்சீர் கல்வி பாட புத்தகம் வாங்க ஆர்வமில்லாத தனியார் பள்ளிகள் Posted:24-09-15 21:04 சமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்டம் மற்றும் இந்திய இடைநிலை சான்றிதழ் பாடத்திட்டமான, ஐ.சி.எஸ்.இ.,யை பின்பற்றும் பள்ளிகளைத் தவிர, மற்ற பள்ளிகள், தமிழக அரசின் சமச்சீர் கல்வியை பின்பற்றுகின்றன.இதில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையில், மூன்று பருவங்களாக பாடம் நடத்தப்படுகிறது. முதல் பருவத்துக்கு வரும், 26ம் தேதி தேர்வு ... பார்லி.,க்கு உத்தரவிடுவது லட்சுமண ரேகையை மீறுவதாகும் Posted:24-09-15 21:16 புதுடில்லி:பார்லிமென்டை எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 'பார்லிமென்ட் நடவடிக்கைகளில் கோர்ட் தலையிடுவது, லட்சுமண ரேகையை தாண்டுவது போன்றது' என, நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். பார்லிமென்ட் கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக, அடிக்கடி பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், பார்லி மென்டை சுமுகமாக செயல்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் உத்தரவுஇந்த மனு, தலைமை நீதிபதி, ... 'நேரு உளவு பார்த்ததற்காக சோனியா,ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்' Posted:24-09-15 21:25 கோல்கட்டா,: ''நேதாஜி சுபாஷ்சந்திர போசின் உறவினர்களை உளவு பார்க்க, முன்னாள் பிரதமர் நேரு உத்தரவிட்டதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, நேதாஜியின் பேரன்களில் ஒருவரான சந்திரகுமார் போஸ் வலியுறுத்தி உள்ளார்.64 ஆவணங்கள்திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சில நாட்களுக்கு முன், நேதாஜி தொடர்பாக, மேற்கு வங்க அரசு வசமிருந்த, 64 ஆவணங்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறும் போது, 'இந்த ஆவணங்களைப் பார்க்கும் போது, நேதாஜியின் உறவினர்களை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் ... 1.84 லட்சம் வழக்குகளை வாபஸ் பெற்றது ம.பி., :முன்மாதிரி நீதிமன்றங்களின் சுமையை குறைக்க நடவடிக்கை Posted:24-09-15 21:43 போபால்:'கோர்ட்டில், வழக்குகள் முடங்கிக் கிடக்கின்றன' என, வெறுமனே சொல்லிக்கொண்டிருக்காமல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மாநில கோர்ட்டுகளில் முடங்கிக் கிடந்த வழக்குகளில், 1.84 லட்சம் வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது, ம.பி., அரசு. இதன்மூலம், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதுடன்,நீதிபதிகளின் பணிச்சுமையும் குறைந்து உள்ளது.ம.பி.,யின் இந்த புதுமையான முடிவால், பிற மாநிலங்களும் இந்த நடைமுறையை பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேசத்தில், தாலுகா கோர்ட், மாவட்ட கோர்ட், மாநில உயர் ... நீங்கள் எதிர்பார்ப்பதை நிறைவேற்றுவோம்: ஸ்டாலின் பேச்சு Posted:24-09-15 22:27 விருதுநகர்,:“தமிழகத்தில் மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் அதை நாங்கள் நிறைவேற்றுவோம்” என, விருதுநகர் மாவட்டத்தில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை மேற்கொண்ட தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.ராஜபாளையத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு பயணத்தை துவக்கிய அவர் விலங்குகள் பாதுகாப்பு மையம் சென்று நாய் வகைகளை பார்வையிட்டு,பெர்சியன் வகை வெள்ளை பூனையை பார்த்து ரசித்தார். அங்குள்ள நுழைவு வாயிலில் மரக்கன்றுகளை நட்டார். தனியார் மார்க்கெட் சென்ற அவரிடம் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்துருக்கு காலை 10.50 மணிக்கு ... மஞ்சக்குடியில் தோன்றிய ஒளிக்கீற்று ஒரு குருவின் பாதை...! 1930 -2015 Posted:24-09-15 22:38 தமிழகத்தில், திருவாரூரிலுள்ள மஞ்சக்குடி எனும் கிராமத்தில், கடந்த, 1930ம் ஆண்டில் பிறந்த, பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி, தனது ஆன்மிக பாதையை அகில உலகமெங்கும் விரிவு படுத்தினார். இந்த ஆன்மிக குரு, கவிஞர், இசைஞர், சமூக சேவகர், சொற்பொழிவாளர் என, பல அவதாரங்களை தரித்தவர். இன்று, அவர் நம் கண்களின் காட்சிக்கு மறைந்தாலும், காலமெல்லாம் ஆன்மிக குருவாக, நம் இதயங்களில் ஆட்சி செய்வார்! பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி: பூத உடல் இன்று நல்லடக்கம்சுவாமி தயானந்த சரஸ்வதியின் இறுதிச் சடங்குகள், ரிஷிகேஷில் இன்று காலை 7.00 முதல் 11 .00 மணிக்குள் நடைபெறும் என, ஆசிரம ... அமெரிக்காவில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு Posted:24-09-15 23:08 நியூயார்க்:ஐந்து நாள் சுற்றுப்பயணமாக, நேற்று அமெரிக்கா சென்ற, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பிரதமர் மோடி, 22ம் தேதி, டில்லியில் இருந்து புறப்பட்டு, அயர்லாந்து சென்றார். அங்கு, அந்நாட்டு பிரதமருடன், இருதரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார். அயர்லாந்தில், இருநாள் பயணத்தை முடித்து, நேற்று காலை, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு, பிரதமர் சென்றார்.ஜான் கென்னடி விமான நிலையத்தில், அமெரிக்காவுக்கான இந்திய துாதர் அருண் கே சிங், ஐ.நா.,வுக்கான இந்திய பிரதிநிதி அசோக் முகர்ஜி ஆகியோர், தங்கள் குடும்பத்தினருடன், ... தூய்மை இந்தியா திட்டத்தில் என்.சி.சி. மாணவர்கள்: மனோகர் பாரிக்கர் வலியுறுத்தல் Posted:25-09-15 01:58 புதுடில்லி:'தூய்மை இந்தியா திட்டத்தில் என்.சி.சி.யை சேர்ந்த மாணவர்கள், தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்'' என பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வலியுறுத்தினார். இதுதொடர்பாக டில்லியில் நேற்று(24-09-15) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது: தேசிய மாணவர் படையில், தற்போது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். அவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து, தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும். தேசிய மாணவர் படையிலுள்ள ஒவ்வொரு மாணவரும், குறைந்தது ஒரு கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். ... தொழில்நுட்பம் சார்ந்த சமூகத்தில் உள்ளோம்:சி.இ.ஓ-க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி Posted:25-09-15 04:43 நியூயார்க்:நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 70-வது அமர்வு, கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவரை அமெரிக்க வாழ் இந்தியர்கள் குடும்பத்துடன் வந்து மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நடந்த வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரியும் சேர்மனுமான அஜய் பங்கா,21செஞ்சுரி பாக்ஸ், சோனி, டிஸ்கவரி, டைம் வார்னர், ஏ அண்டு இ, வைஸ் மீடியா இவையனைத்தையும் ஒருங்கிணைக்கும் ரூபர்ட் முர்டோக் நியூஸ் கார்ப்பரேசன், ... மெக்கா கூட்ட நெரிசலில் 3 தமிழர்கள் பலி; ஜெ, இரங்கல் Posted:25-09-15 10:04 புதுடில்லி : மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் 14 பேர் இந்தியர்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. உயிரிழந்த 14 பேர் மற்றும் காயமடைந்த 13 பேரின் பட்டியலை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இறந்துள்ளதாகவும் . அவர்களது குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெ, இரங்கல் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் ஒரே நேரத்தில் லட்சகணக்கானவர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி மொத்த 714 பேர் உயிரிழந்துள்ளனர். 800 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கூட்ட ... பாக்.,கை இந்தியா கட்டுப்படுத்தும்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் கருத்து Posted:25-09-15 12:06 நியூயார்க் : "உலகின் மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான். அதை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட நாடு இந்தியா தான்" என அமெரிக்க குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் டொனால்ட் பேசினார். அப்போது அவர், இன்று உலகில் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான். வடகொரியாவை போன்று அணுஆயுதுங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான, பைத்தியகாரத்தனமான காரியங்களை செய்து வரும் நாடும் அது.பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. அதற்கு தகுந்த ஆயுத பலமும், ராணுவமும் ... மோசமான சம்பளம்: டாப் 10 பட்டியலில் இந்திய ஐடி நிறுவனங்கள் Posted:25-09-15 14:18 புதுடில்லி : ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் தான் ஏகத்திற்கும் சம்பளம் வாங்குவதாக பரவலாக கருத்து உள்ளது. அது சுத்த பொய் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது. உலக அளவில் மிக மோசமான சம்பளம் தரும் நிறுவனங்களில் இந்திய ஐடி கம்பெனிகள் டாப் 10 இடத்தில் உள்ளன. உலக அளவில் தொழில்நுட்ப துறையில் மோசமாக சம்பளம் வழங்கும் நிறுவனங்கள் குறித்து மைஹிரிங்கிளப் டாப் காம் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. ஐடி நிறுவனங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.சுவிஸ் ஐடி ...

No comments:

Post a Comment